நெருப்பு ஓடு வடிவில் காமாட்சி அம்மன் !

நெருப்பு  ஓடு
  வடிவில் காமாட்சி அம்மன் !

பெருந்தச்சன் இனத்தை சேர்ந்த     

   எனதருமை பொற்கொல்லர்களே..

ஆம்.கம்மாளர்களே ..நாமே உலகின் அறிவார்ந்த மூத்த இனம் என்பதில் பெருமிதம் கொள்வோம்.

பாெற்காெல்லர் கவனத்திற்க்கு


நாம் அன்றாடம்
    ஸ்ரீ காமாட்சி அம்மனை நினைத்து நெருப்பு ஓட்டில் சூடம் ஏற்றி தான் 
 நெருப்பு உண்டாக்க வேண்டும் , பழைய துணி, மண்ணெண்னய் போன்றவைகளை உபயோகிக்க கூடாது,

அக்னி பிழம்பாக காட்சி தருகின்ற

 ஸ்ரீ காமாட்சி அம்மன், விஸ்வகர்மாவாகிய நமக்கு தாய் போல , நமக்கு அன்பும் , அனுகிரகம் செய்யும் தாய் , நமக்கு துன்பம் ஏற்படும் போது புராணங்களில் எழுதப்பட்டது போல் அவ்வப்போது நம்மை  காப்பாற்றும் தெய்வமாக  அன்றும், இன்றும், நமக்கு துணை செய்யும் அற்புத தெய்வம்,

அப்படிப்பட்ட அக்னி சட்டி , அதாவது நெருப்பு ஓட்டில் அமர்ந்து காட்சி தரும் தாயாள சக்தி சொரூபமான நெருப்புஓட்டை , ஆயுத பூஜை அன்று மறு ஓடு மாற்றும் பொழுது, ஒரு வருடமாக  பவுண் உருக்கி, வேண்டிய நகைகளை செய்து கொடுத்து நற்பெயரும், நம் குடும்பத்திற்க்கு உணவும் அளித்த அந்த (அக்னி சட்டியை) நெருப்புஓட்டை தெருக்களில் வைத்து விடாமல், அதை பாதுகாக்க வேண்டும், நம் வீட்டில் பூச்செடிகள் வைப்பதற்க்கும் , வேண்டாம் என்றால் பிறர்க்கு பூ தொட்டி வைக்க கொடுங்கள்,
அது நம் குல முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் , ஏனென்றால் நமது சமூகத்தொழில் குறைந்தும், குலத்தொழில் நமக்கு என்று இருந்தது, அது கொஞ்சம் கொஞ்சமாக விலகி வருகிறது , எஞ்சி இருக்கும் நமது சமூக விஸ்வகர்மா குடும்பங்கள் தழைத்து வளர வேண்டும் , அதற்க்காக - இந்த ஆண்டு ஆயுதபூஜைக்கு போன ஆண்டு உள்ள நெருப்புஓட்டை வெளியே போடாமல் அதை மதித்து நாம் பாதுகாப்போம்,

என்று நமது சமூகத்தினர் அனைவரையும் இரு கரம் கூப்பி வணங்கி கேட்டுக்கெள்கிறேன்,

        இப்படிக்கு
               உங்களில் ஒருவன்
                         அழகர் , பாலன் ,
                          இவன் விமல் ,

சமூகத்தின் தாழ்வான நிலையில்
நமது இனம் இருந்த காலத்தில் நமக்கு இருந்த ஆசாரி என்ற பெயரும் நமது பெருமையை குலைப்பதாக எண்ணிய நமது இனம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தான் விஸ்வகர்மா என்று புதிய பெயருடன் அவதாரம் எடுத்தது.
ஆதாரம்:இந்திய சமுதாயம்,ஆசிரியர் :சியாமளா சாரன் துபே.வெளியிடு:நேசனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா.
(உண்மை என்னவென்றால் ஆசாரி அல்லது ஆச்சாரியார் என்பவர் ஒன்றை மற்ற ஒருவருக்கு கற்று தரும் உயர்ந்த நிலையில் இரு க்கும் ஆசிரியர் என்று பொருள்பட கூடியவர் .
காலத்தின் கோலம் இந்த ஆசாரி,ஆச்சாரியார்,கண்மாளர் என்ற கம்மாளர் என்ற பெயர்கள் எல்லாம் புறம் தள்ளப்பட்டு ,நம்மை நாமே உயர்த்தி கொள்ள பிரம்மனால் படைக்கப்பட்ட இனம் என்றும் நமக்கு ஒரு கவுரவத்தை கொடுத்து கொள்வதற்காக வைக்கப்பட்ட பெயர் தான் விஸ்வகர்மா என்கிறது இந்திய அளவில் புகழ் பெற்ற புத்தக வெளியட்டு நிறுவனம் ஆன நேசனல் புக் ட்ரஸ்ட் ஆப் இந்தியா.
பல உயர்ந்த உலகம் போற்றும் தஞ்சாவூர் கோவில் உள்பட பல கோவில்களை படைத்த நமது முன்னோருக்கு படைப்பை ஆதாரம் காட்ட, செய்த கலைமீது பெயர் குறிப்பிடும் வழக்கம் இல்லை.
இதனால் காலப்போக்கில் நாம் புறக்கணிக்க பட்டோம். எதையும் செய்யாமல் தங்களை பெரிய இனம் என்று குறிப்பிடும் இனங்கள் இருக்கும், இந்தியாவில் நாம் நமது பெருமையை காக்க தவறியதால் ஆசாரி,ஆச்சாரியார் என்ற சொல்லுக்கான மதிப்பை இழந்து பெயரளவில் பிரமனின் அம்சம் என காட்ட விஸ்வகர்மா என்றானோம்.ஆதாரம்


நமது சமுதாயம் முன்னேற கீழ்க்கண்டவற்றை நாம் நடைமுறைப் படுத்தியே ஆகவேண்டும்.

1.  நம் சமுதாய மாணவர்களின் உயர்கல்விக்காக, நம் சமுதாயம் மிகவும் பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியது அவசியம்.

2. நம் குலத்தொழிலை சிரமேற்கொண்டு செய்து வரும் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் சங்கம் அமைப்பது இன்றியமையானது.

3. வறுமையில் வாடும் நம் குலத்தைச் சார்ந்த மக்கள், மதமாற்றம் செய்யப்படுவது தடுக்கப் பட வேண்டும்.

4. சுயக் கட்டுப்பாடு, தீய பழக்கவழக்கங்களிலிருந்து விடுபட்டு சான்றோனாதல், நம் சமுதாய மக்களுக்கு நாமே உறுதுணையாக இருத்தல் என்பதோடு மட்டுமல்லாது, விஸ்வகர்மாவாக இருப்பதில் பெருமை கொள்ளுதல் வேண்டும்

மேலும் தகவல்களுக்கு ; Please click 👇
https://goldenvimal.business.site/?m=true e
  https://sites.google.com/site/nsvimalgolden/

www.goldenvimal.com

 Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad