வீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா?

Goldenvimal இவன் விமல்



வீட்டில் செல்வம் அதிகரிக்க மீன் தொட்டியை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென்று தெரியுமா?

இங்கு வீட்டில் மீன் தொட்டி வைப்பவர்கள், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.


பல கலாச்சாரங்களில் மீன் தொட்டி அதிர்ஷ்டம் கொட்டும் ஒன்றாக கருதப்படுகிறது. சொல்லப்போனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை வீட்டில் சரியான இடத்தில் வைப்பதன் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கலாம். மேலும் பலருக்கும் வீட்டில் மீன்களை வளர்க்க பிரியம் இருக்கும்.

உங்கள் வீட்டிலும் மீன் தொட்டி இருந்தால், இக்கட்டுரையை உடனே படியுங்கள். ஏனெனில் வீட்டில் மீன் தொட்டியை வைத்திருந்தால், ஒருசிலவற்றைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து, வீட்டில் வறுமையை அதிகரிக்கும்.

சரி, இப்போது வீட்டில் மீன் தொட்டி வைப்பவர்கள், மனதில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து காண்போம்.



விஷயம் #1

வீட்டில் எப்போதும் மீன் தொட்டியை சமையலறையில் அல்லது படுக்கை அறையில் வைத்திருக்கக்கூடாது. இதனால் வீட்டில் பண இழப்பு தான் ஏற்படும்.



விஷயம் #2

வீட்டில் மீன் தொட்டியை கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் வைப்பதே மிகவும் சிறந்தது. வாஸ்துவின் படி, இப்படி வைப்பதால், குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும்.



விஷயம் #3

ஃபெங் சூயி படி, மீன் தொட்டியில் குறைந்தது 9 மீன்கள் இருக்க வேண்டும். அதிகப்பட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம்.



விஷயம் #4

மீன் தொட்டியில் உள்ள மீன்களின் நிறமும் முக்கியமானது. அதில் 8 மீன்கள் சிவப்பு, ஆரஞ்சு அல்லது கோல்டன் நிறங்களிலும், ஒரு மீன் கண்டிப்பாக கருப்பு நிறத்திலும் இருக்க வேண்டும்.



விஷயம் #5

மீன் தொட்டியில் கருப்பு மீன் இருந்தால், அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றல்களை முற்றிலும் உறிஞ்சிவிடும். ஒருவேளை அந்த கருப்பு மீன் இறந்துவிட்டால், அது வீட்டில் உள்ள அனைத்து கெட்ட சக்திகளையும் தன்னுள் ஈர்த்துக் கொண்டது என்று அர்த்தம்.



விஷயம் #6

வீட்டினுள் நுழையும் போது, மீன் தொட்டி எப்போதும் இடது பக்கத்தில் இருப்பதே நல்லது.



விஷயம் #7

நன்கு ஆரோக்கியமாக, சுறுசுறுப்பாக மற்றும் சுட்டித்தனமாக இருக்கும் மீன்களை தொட்டியில் வளர்த்தால், அது வீட்டினுள் செல்வம் மற்றும் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.



விஷயம் #8

மீன் தொட்டியை வீட்டின் தென்கிழக்கு பகுதியில் வைத்தால், அது அளவுக்கு அதிகமாக கண்டதை பற்றி சிந்திப்பதைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும்.



விஷயம் #9

ஒருவேளை மீன் இறந்துவிட்டால், அதை நீக்கிவிட்டு, அதே நிறத்தில் மற்றொரு மீனை தவறாமல் வாங்கிப் போடுங்கள்.



விஷயம் #10

மீன் தொட்டியை அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியம்  
        இவன் விமல் 

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad