குல தெய்வம் கரியமால்


ஆசாரி குல தெய்வம்  விஸ்வகர்மா
   
      
               ஸ்ரீ  கரியம்மால் துணை
                வெட்டுவார்துறை  நாடு
                    இடம்  தாண்டிக்குடி



      கரியம்மால்   காேவில் முன்புற தாேற்றம்


தாண்டிக்குடியில்

காேவில் இருக்குமிடம்

சந்நதி






பூசாரி   பெயர்  காேவிந்தசாமி 
தாெலைப்  பேசி
நம்பர்    9786524139
                  7094080947
பூசாரி காளிதாஸ் 
 78250 46663

விமல் 9865138410


 வத்தலக்குண்டில் 9.00 Amமுதல் பஸ் அடுத்து 10.10am 10.40எடுப்பார்கள்
 
 பயணகட்டணம் : 46 ரூபாய்
 
12.00 பெரும்பாறை ஸ்டாப் டீ ப்ரேக் 5 நிமிடம்
பயண நேரம் 2 மணிநேரம்
4.00pm 4.10 எடுப்பார்கள் 4.55 பெரும்பாறை ஸ்டாப் டீ ப்ரேக் 5 நிமிடம் 6.20pm வத்தலக்குண்டு 

வத்தலக்குண்டு முதல் திண்டுக்கல் 
பயணகட்டணம் : 30 ரூபாய்

3.45am
5.05am
5.40am
6.45am
9.00am
10.45am
11.45am
1.45pm
4.00pm
6.25pm

திண்டுக்கல்லில் 5.15 am முதல்
பயணகட்டணம் : 55 ரூபாய்






ரத்தம் உருஞ்சும் அட்டைப்பூச்சி அதிகம் மழைக்காலங்களில்  உரிய பாதுகாப்புடன் செல்லவும்.

பூச்சி கடித்தால் பூச்சி இருக்கும்போது அதன் மீது தூள் உப்பு தூவலாம்..

டெட்டால் dettol கால்களில் தடவிகொண்டால்  பூச்சி ஏறாதாம் ...

வத்தலக்குண்டுல் இருந்து  பாேருந்து  10.15க்கு இருக்கு  சாமி தரிசனம்         
      வெள்ளிக்கிழமை  மட்டும் பூஜை 



விமல்



இது கரியமால் மண்

கோவிந்தசாமி, பூஜாரி கூறியதாவது:எங்கள் குடும்பத்தில் 15 வது கரியமால் (பெருமாள்) பூஜாரியாக தேர்வு செய்யப்பட்டு பணி செய்கிறேன். இக்கிராமத்தில் நீதி, நேர்மை உள்ளதால் ஏதாவது அநியாயம் நிகழும் போது, தவறாக எதுவும் நடக்காது என்பதற்காக 'இது கரியமால் மண்' என பெருமையுடன் கூறுவர். அத்தகைய கரியமால் சுவாமியின் அருள் இறங்கி ஒருவரை தேர்வு செய்ததே தற்போதைய பட்டக்காரர்.

* வியப்பாக உள்ளது





ஜி.பி.கோவிந்தசாமி, மந்திரியார்:
பட்டக்காரர் தேர்வு முறை வியப்பாக உள்ளது. நமது முன்னோர்கள் கடைபிடித்த நெறிமுறையால் கிராமம் தழைத்தோங்கியுள்ளது. அதன்படியே நாங்கள் கிராம வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கிறோம்.



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் பட்டாளம்மன், முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.  15 நாட்கள் நடந்த இந்த திருவிழாவின் கடைசி நாளான நேற்று கரியமால் சுவாமிக்கு சேத்தாண்டி வேடம் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான ஆண்கள், வயது வேறுபாடு இல்லாமல், ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி வீசியும், சேற்றை தங்களது உடலில் பூசியும், சேத்தாண்டி வேடமிட்டும் ஊருக்குள் ஊர்வலமாக வந்து முத்தாலம்மனை வேண்டினர். மேலும், பல வகையான வண்ண பொடிகளை வீசி கொண்டாடினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘உடலில் சேறு பூசி வேண்டுவதால் விவசாயம் செழிக்கும். 200 ஆண்டுகளாக இந்த வேண்டுதல் நடந்து வருகிறது’’ என்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை மையமாக கொண்டு மேல்மலை, கீழ்மலை மற்றும் பழனி வரை சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திற்கும் தாய் கிராமமாக கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் உள்ள தாண்டிக்குடி உள்ளது. இந்த கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி ராஜா என்ற அந்தஸ்துடன் பட்டக்காரர் என்பவர் தலைவராக இருப்பார். அவருக்கு தாண்டிக்குடியில் நடைபெறும் விழாக்களில் முதல் மரியாதை அளிக்கப்படும்.


இந்தநிலையில் தாண்டிக்குடி கிராமத்தின் ராஜாவாக கடந்த 40 ஆண்டுகளாக மங்கலகாந்தி என்பவர் இருந்து வந்தார். சமீபத்தில் அவர் இறந்துவிட்டார். இதைத்தொடர்ந்து புதிய ராஜாவை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, தாண்டிக்குடியில் நடைபெற்றது. இதற்காக கிராமத்தினரின் முன்னிலையில் ஊர்சாவடியில் உள்ள ஜல்லிக்கோட்டை என்ற நடுகல் பகுதியில் வழிபாடு நடைபெற்றது. அப்போது அப்பிச்சி என்ற பச்சை பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு பட்டக்காரர் வகையறாக்களை சேர்ந்த நபர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டனர். பின்னர் அவர்களில் ஒருவரை, பாரம்பரிய முறைப்படி தாண்டிக்குடி கரியமால் கோவில் பூசாரி இலைகளால் ஆன பச்சை மாலையை அணிவித்து ராஜாவை அடையாளம் கண்டார்.

அதன்படி, தாண்டிக்குடியை சேர்ந்த கணேசன் (வயது 43) என்பவர் புதிய ராஜாவாக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி அவரது கால்கள் தரையில் படாதபடி வழிநெடுகிலும் சேலையை விரித்து பூசாரி வீட்டுக்கு அழைத்து வந்தனர். அங்கு கருப்பு கம்பளம் விரித்து, பால், பழம் கொடுத்து ராஜாவை உபசரித்தனர். பின்னர் அவரை வீட்டிற்குள் அமர வைத்து, மற்ற சம்பிரதாய சடங்குகளை செய்தனர்.

பழங்காலத்தில் குறிப்பிட்ட எல்லை பகுதிகளுக்கு ராஜா என்பவர் இருப்பார். மேலும் கிராமங்களுக்கு ஊர் நாட்டாண்மை என்று அழைக்கப்படும் ஊர் தலைவராக இருப்பார். அந்த வகையில் கொடைக்கானல் அருகே இன்றளவும் பாரம்பரிய முறைப்படி கிராமத்திற்கு ராஜாவை நியமித்து, பொதுமக்கள் விழாக்களில் மரியாதை செலுத்தி வருவதை பலரும் வினோதமாக பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஸ்ரீ கரியமால் வரலாறு விரைவில் ,,,,



👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad