கருங்காலி மாலை தோஷம், பிரச்சனைகளை தீர்க்கும்

                                      Sri...
தோஷம், பிரச்சனைகளை தீர்க்கும் கருங்காலி  மாலை

கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும்.
நவகிரக நாயகர்களில் இது செவ்வாய் பகவானுக்குரியது.  இவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் இந்த கருங்காலி மாலை அணிவதன் மூலம் நமக்கு கிடைக்கும். கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது. இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது. தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம். கருங்காலி மாலையை ஆண் பெண் என இருபாலரும் அணிந்து பயன்பெறலாம். நமது உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்தும். ஜீரண கோளாறு நீங்கும் பெண்கள் மாதவிடாய் கோளாறு சரியாகும். ஆண்,பெண் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும். உடலில் சோம்பல் நீங்கி சுறு சுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும்.

நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பேச்சுதிறமை அதிகரிக்கும். வியாபார தொழில் போட்டிகளில் வெற்றி கிட்டும். நிலபுலன்கள் வாங்க வழி வகுக்கும். நிலம் சம்மந்த பட்ட தொழில் செய்பவர்கள் இதை அணிந்து கொள்ள அத்துறையில் வெற்றி வாகை சூடலாம். விஷ பூச்சிகள் நம்மை அண்டாமல் பாதுகாக்கும். வாகன விபத்துகளை தடுத்து நமது பயணங்களை பாதுகாக்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். சகோதர் பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி பிரச்சனை இருப்பின் பிரச்சனை நீங்கி கணவன் மனைவி உறவு மேம்படும்.

கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும் நீங்கும். கருங்காலி மரம் மேஷம், விருச்சிகம் ராசி, அஸ்வினி, பரணி, விசாகம், அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், செவ்வாய்க்கிழமை அன்று பிறந்தவர்களுக்கும், மார்ச் 21 முதல் ஏப்ரல் 20 வரை பிறந்தவர்களுக்கும் நல்ல மருந்துமாகும். நோய்கள் நீங்க கருங்காலி கட்டையை கையில் தாயத்தாக அணிந்துகொண்டாலும் நல்ல பலன் இருக்கும். எல்லா கோயில்களிலும் கும்பாபிஷேகத்தின் போது கருங்காலி கட்டைகளை கலசத்தின் உள்ளே போடுவார்கள். அதனால் இடி மின்னலால் எந்த பாதிப்பும் அந்த கோயிலை சுற்றி வசிக்கும் நபர்களுக்கு வருவதில்லை. கருங்காலி மரம் ரொம்ப அரிதான மரம். ஒரு சில ஆலயங்களில் மட்டுமே இப்போது இருக்கிறது. மூலிகை மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் கருங்காலி மரத்தைப் பயன்படுத்தலாம். வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும்.
what is ebony(karungali)?
கருங்காலி ஒரு பழமையான மர வகையை சார்ந்தது. பல ஆண்டுகள் வாழ்ந்த மரத்தின் நடுப்பகுதி மிகவும் சக்தி வாய்ந்ததாக கருமையாக இருக்கும். அப்படி கருமையான நடுப்பகுதியை வெட்டி நம் தேவைக்கு ஏற்ப சுவாமி சிலைகள், வீட்டு உபயோக பொருட்கள் செய்யப்படுகிறது.

குறிப்பாக பழைய காலத்தில் உலக்கை கருங்காலி மரத்தில் தான் செய்து பயன்படுத்தி வந்துள்ளனர். இப்போது விலை உயர்வினால் வேறு சில மரங்களினால் செய்யப்படுகிறது.

karungali benefits in tamil
கருங்காலி மரம் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.

கருங்காலி மரத்தின் வேர், பட்டை, பிசின் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. துவர்ப்பு தன்மை மிகுந்தது. நீரிழிவு, பெருவயிறு மற்றும் இரத்த குறைபாட்டால் ஏற்படும் நோய்களும் சரியாகும்.

karungali benefits to reduce fat
கருங்காலி மரத்தின் வேரை எடுத்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்து நல்ல தண்ணீரில் ஊற வைத்து பிறகு அந்த தண்ணீரை கசாயமாக காய்ச்சி வடிகட்டி அருந்தினால் வயிற்றுப்புண் ஆறும். வயிற்றில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும்.

வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை வெளியேற்றும். நீரிழிவு நோயாளிகள் தினமும் இருவேளை இந்த கஷாயத்தை அருந்தினால் சர்க்கரையின் அளவு குறையும்.

karungali benefits for body strength
ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். பித்தத்தை குறைக்கும்.

கருங்காலி மரத்தின் பிசினை இடித்து பொடியாக்கி தினமும் பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலுவாகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும்.
பெண்களின் கர்ப்பப்பை வலுவாக்கும். அதிக இரத்தப் போக்குள்ள பெண்களுக்கு நல்ல பலனளிக்கும்.

பெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளை படுதல் பிரச்சனையை சரிசெய்யும்.

கருங்காலி பிசின் உடலின் நரம்பு தளர்ச்சி பிரச்சனையை சரிசெய்யும். 

கருங்காலி கட்டையை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை கொண்டு குளித்தால் உடல் வலி, உடம்பு சோர்வு அனைத்தும் நீங்கும்.

karungali malai benefits in tamil
கருங்காலி மாலையானது நன்றாக வைரம் பாய்ந்த மரம் கொண்டு செதுக்கி மணிகளாக செய்து 108 மணிகளை கொண்டு மாலையாக செய்யப்படுகிறது. 

கருங்காலி மாலை கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது.

ஆகையால் நம்முடைய அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் போக்கி நேர்மறை எண்ணங்களை நம்முள் செலுத்தக்கூடிய தன்மை நிறைந்தது.

பொதுவாக கோயில்களின்  கலசங்களில் கருங்காலி கட்டையை போடுவார்கள். எதற்காக என்றால் எப்படிப்பட்ட கதிவீச்சுகளையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்பதற்காகத்தான்.
என் பதிவில் உங்கள் நேரத்துக்கு நன்றி சொல்லும் அதேவேளையில், எனக்கு தகவல் கொடுத்த அனைத்து புத்தகங்களுக்கும், இணையதளங்களுக்கும், பதிவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் தகவல்களுக்கு ; Please click 👇 

https://goldenvimal.business.site/?m=true 

https://sites.google.com/site/nsvimalgolden/www-goldenvimal-com **என்றும்  அன்புடன்  விமல் ** 98651-38410  ** 82203-03410 ** திண்டுக்கல் ** Goldenvimal ** www.goldenvimal.ml ** குருசாமி பிள்ளை சந்து ** திண்டுக்கல் ** இதுபாேன்ற இணையதளம் உங்களுக்கு உருவாக்க அனுகவும் 98651-38410 ** Writing by Goldenvimal ♥♥♥♥ இவன் விமல் உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள் தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
                             தாெடரும்,,,

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

👇🌎 Website Link's முக்கிய இணைப்புகள் 🌎👇

Top Post Ad

Below Post Ad